முனிவர் உதங்கரும், கிருஷ்ண பரமாத்மாவும்!- நன்னெறி கதையும் குறளும்! நாளும் பல நற்செய்திகள் 26-08-2022
Contact us to Add Your Business
'உதங்கர்' என்ற முனிவர் ஐம்புலன்களையும் ஒடுக்கியவர்.
அவர் முன், கிருஷ்ண பரமாத்மா தோன்றி காட்சியளித்தார்.
என்ன வேண்டும்? கேளுங்கள் முனிவரே…
இறைவா, எல்லாமே உன்னுடையது!
இந்த உலகம் நீ படைத்தது!
அதிலுள்ள உயிர்கள் எல்லாமே நீ படைத்தது!
அதைப்போல் வாழ்வும், மரணமும் உன்னாலேயே படைக்கப்பட்டவை!
அப்படி இருக்க, நான் என்ன கேட்பது? எல்லாமே உன் சித்தம்!
நான் பசியால் வாடினால், அப்போது எனக்கு நீ உணவாக வர வேண்டும்!
தாகத்தால் தவிக்கும்போது, என் தாகம் தீர்க்கும் நீராக நீ வர வேண்டும்!
முனிவரின் வேண்டுகோளைக் கேட்டு "அப்படியே!" என்றார் கிருஷ்ணர்!
நெடுங்காலத்திற்குப் பின்னர் ஒருநாள், உதங்கர் பாலைவனத்தின் வழியே சென்றார்.
அவருக்கு அப்போது தாகம் தொண்டையை வறட்டியது.
கண்கள் பஞ்சடைய ஆரம்பித்தன.
மனம் இறைவனை நினைத்தது.
அந்தச் சமயத்தில், தமக்கு மிக அருகில் நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டுக் கண்களைத் திறந்த முனிவர் எரிச்சலானார்.
அவர் எதிரே, வேடன் ஒருவன் நின்றிருந்தான்.
அவன் தன் ஒரு கையில் நான்கைந்து வேட்டை நாய்களைப் பிடித்திருந்தான்.
அவனது தோளில் வேட்டையாடிய காட்டுப்பன்றியின் உடல் இருந்தது.
மறு தோளில் வில்லும், அம்பும் மாட்டியிருந்தான்.
அழுக்கேறிய அவனுடைய உடலிலிருந்தும், துணிகளிலிருந்தும் புலை வாசம் வீசியது.
"என்ன சாமியாரே, இம்மாந்தொலைவு வந்துருக்கீங்க? இங்கெல்லாம் யாரும் வரமாட்டாங்க. முகமெல்லாம் வேர்த்து கெடக்குதே? இந்தாங்க தண்ணீர் குடியுங்க" என்று அவன் நீட்டிய குடுவையைப் பார்த்து குடலைப் புரட்டிக்கொண்டு வந்தது உதங்கருக்கு.
அதை வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டார்.
புலையன் திரும்பத் திரும்ப வற்புறுத்தினான்.
"ச்சீப்போ…" என்று முனிவர் விரட்டவும் சட்டென்று மறைந்து போனான்.
திடீரென அவர் மறையவும் திடுக்கிட்டார் முனிவர்.
இது ஏதோ இறைவனின் லீலை என்று உணர்ந்து கண்மூடி பிரார்த்தித்தார்.
மறுகணம் அவர் முன்பு கிருஷ்ண பரமாத்மா தோன்றினார்.
"முனிவரே! உமக்காக நான் இந்திரனிடம் அமிர்தம் கொடுக்குமாறு வேண்டினேன்.
அதற்கு இந்திரன் மறுத்தான்.
மானிடர்களுக்கு அமிர்தம் தர விதியில் இடமில்லை என்றான்.
அவனை நான் மிகவும் வற்புறுத்தினேன்.
கடைசியில் அரை மனதுடன் சம்மதித்தான்.
கோர உருவத்தில் செல்வதாகவும், அவர் வாங்கிக் கொண்டால் சரி, இல்லையேல் திரும்பி விடுவதாகவும் கூறினான்.
நீர்தான் ஞானி ஆயிற்றே? பேதங்களைப் பார்க்கமாட்டீர் என்று எண்ணினேன். ஏமாந்துவிட்டீரே?" என்றார் கிருஷ்ண பரமாத்மா.
அமிர்தத்தை இழந்த உதங்கர் வெட்கித் தலை குனிந்தார்.
'உருவுகண்டு எள்ளாமை வேண்டும்' – வள்ளுவப் பெருமகனார்.நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
இனிய மொழி தமிழ், அந்த தமிழுக்கு கற்றல் என்ற குரல் ஒலிக்கும் போது அந்த மொழி அமுத மொழியாகி சிறப்பானதக தெரிகிறது. சிறப்பு, அருமை, வாழ்த்துகள்.? ? ? ?
நமது வாக்கு நமது ஆயுதம் . ?????? ??????
இலக்கு ஒன்றே…. .அடிமைத்தனத்திலிருந்து தமிழர் இனத்தின் விடுதலை ???????????????
சிறப்பு ☝️????
நன்றாக இருந்தது.❤
??மிக அருமை ???
????❤❤✊✊❤❤??
அருமை
????????
எனக்கு என்னமோ.. நீங்கள்
கோனார் ஓட்டுக் கு குறி வைப்பதாக தோன்னுகிறது ☺️